இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை மாற்றி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை முழுவதுமாக தொடங்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து, சிறப்பு விமானங்களில் மட்டுமே பயணிகள் பயணித்து வரும் நிலையில், அண்மையில் பரவிய ஒமைக்ரான் பாதிப்பால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் பாதிப்புகள் இந்தியாவில் குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டபோது அமலான 'கொரோனா ஆபத்து அதிகமுள்ள நாடுகள்' பட்டியல் இன்று நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏழு நாள்கள் வரை வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது. அதற்கு பதிலாக, தற்போது 14 நாள்கள் வரை தங்களை தானே சுயமாக கண்காணித்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புதிய பாதுகாப்பு வழிமுறைகள் பிப்.14ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாறுதலுக்குள்ளாகும் கொரோனாவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்
அதேபோல, பொருளாதார செயல்பாடுகள் எந்த ஒரு தடையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, கடந்த 14 நாள்கள் வரையிலான பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை 'ஏர் சுவிதா' என்ற இணையதளத்தில் வெளிநாட்டு பயணிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பயணத் தேதியிலிருந்து 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சோதனை சான்றிதழையும் அவர்கள் பதிவேற்ற வேண்டும் அது இல்லாத பட்சத்தில் அதற்கு மாறாக, இரண்டு டோஸ் தடுப்பூசி செல
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.