“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்

“உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை“ இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம்
  • Share this:
உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3000 டன் எடை அளவுள்ள தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் சுமார் 3,350 டன் தங்கம் இருக்கும் 2 தங்க சுரங்கள் கண்டுபிடிக்கப்படதாக தகவல்கள் வெளியானது. இந்த தங்க சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனமும், உத்தரபிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகமும் உறுதி செய்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அதனை வெட்டி எடுக்கும் பணிக்கு நில ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையில் உத்தரபிரதேச மாநில அரசு இறங்கியுள்ளது. இ-டெண்டர் ஏலம் விடப்பட இருப்பதாகவும் இதற்காக 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அந்த மாநில அரசு அமைத்து இருக்கிறது என்றும் செய்திகள் வெளியானது.


இதனால் உத்திரபிரதேச பொதுமக்கள் சந்தோசமடைந்தனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்