இந்தியாவில் மருத்துவக் கல்வி படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தேசிய தேர்வு நிறுவனத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் இளநிலை மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர முடியும். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்கவும், மாணவர்கள் தரத்தை உறுதிப்படுத்தும் நீட் தேர்வு தேவைப்படுவதாக நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவருகிறது.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. நீட் தேர்வை ரத்து செய்து 12-ம் வகுப்பு தேர்வு முடிவின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுஒருபுறமாக, நீட் தேர்வு விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
பேரறிவாளன் பிணையில் விடுதலையாவது மகிழ்ச்சி - அன்புமணி ராமதாஸ்
தேசிய மருத்துவ ஆணையம் தேசிய தேர்வுகள் நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற 4-வது தேசிய மருத்துவ ஆணையக் கூட்டத்தில் இளநிலை நீட் தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.