பா.ஜ.க அதிக தொகுதிகளில் வென்றாலும் நிதிஷ் குமார்தான் முதல்வர் - மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

பீகார் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமார்தான் முதல்வராக இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அதிக தொகுதிகளில் வென்றாலும் நிதிஷ் குமார்தான் முதல்வர் - மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
அமித் ஷா
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நீண்ட நாள்களுக்குப் பிறகு நியூஸ் 18 குழும செய்தித் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி வைத்ததிலிருந்து 2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். இது பா.ஜ.கவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. பா.ஜ.க தலைவராக முதலில் இதை நான் சொன்னேன். தற்போது, பா.ஜ.கவின் தலைவராக ஜே.பி.நட்டாவும் இதைத்தான் சொல்கிறார்.

நிதிஷ் குமார் பீகாரின் முதல்வர் என்பதை நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உச்சபட்ச தலைவராக பிரதமர் மோடி இருப்பார். வதந்திகளுக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். நிதிஷ் குமார்தான் அடுத்த முதல்வராக இருப்பார். ஜனதாக தளம் கட்சியை விட பா.ஜ.க அதிக இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமார்தான் முதல்வர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுடன் சேர்ந்து ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு சிராக் பஸ்வான்தான் பதிலளிக்கவேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக, நான் சிராக் பஸ்வானுடன் போனில் பலமுறை பேசினேன். தேர்தலுக்குப் பிறகு என்ன சூழ்நிலை இருக்கும் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

தற்போது, நாங்கள் ஒருவருக்கு ஒருவர் மிகக் கடுமையாக மோதிக் கொள்கிறோம். பா.ஜ.கவின் ஒவ்வொரு தொண்டரும், எங்கள் கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகச் சிறந்த உழைப்பைக் கொடுக்கின்றனர். லோக் ஜனசக்தி கட்சி, எங்களுடைய கூட்டணியிலிருந்து விலகியது வலி மிகுந்தது.


எங்களுக்கு இழப்பு. ஆனால், நிலைமை உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. நான் உறுதியாக சொல்கிறேன். எங்களுடைய கூட்டணி 3-ல் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கும். நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்’ என்று தெரிவித்தார்.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading