இடஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதம் என்பதை உயர்த்த வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இதனை வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது நியாயமானதுதான் என்று குறிப்பிட்டார். மேலும், இடஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதம் என்பதை உயர்த்த வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
“50 சதவீத இட ஒதுக்கீடு என்னும் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இந்த உச்ச வரம்பானது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் வாய்ப்புகளை இழக்கச்செய்கிறது.
இதையும் படிங்க: முற்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தீர்ப்பு: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பை மாநிலங்களே மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே பிகாரில் அந்தக் கணக்கெடுப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய அளவிலும் அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் இடஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Nitish Kumar, Reservation