நிதிஷ்குமாரின் அரசியல் வாரிசு யாரு தெரியுமா...?: தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

பிரசாந்த் கிஷோருடன் நித்திஷ் குமார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தன் குடும்பத்தை சாராத ஒருவரை அரசியல் வாரிசாக பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

  இந்திய அளவில் பிரபலமான தேர்தல் வியுக நிபுணரான பிரசாந்த கிஷோர்தான் அவர் என்றும் நிதிஷுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவெங்கும் அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி தலைமைக்கு எப்போதும் சம்பந்தபட்ட தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். பீகாரின் அண்டை மாநிலமான உத்திரபிரேதசத்தில் கூட சமாஜ்வாதி கட்சியின் தலைமை பொறுப்பை முலயாம் சிங் யாதவிற்கு அடுத்து அவரது மகன் அகிலேஷ் யாதவே அடைந்தார்.

  ஆனால் நிதிஷ் குமார் யாரும் எதிர்பாராத வண்ணம் கிஷோரை தன் அரசியல் வாரிசாக அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி நிர்வாகிகளிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.

  பிரசாந்த் கிஷோர் 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக-விற்கு வியூகம் வகுத்துகொடுத்தவர். மேலும் 2015-ம் ஆண்டு தேர்தலில் திமுக-விற்கும் இவர் வியூகம் வகுத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பீகாரைச் சேர்ந்த இவர் நிதிஷுடன் நீண்ட நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அரசின் திட்டங்களை வடிவமைப்பதிலும், அமல்படுத்துவதிலும் அவர் நிதிஷுக்கு உதவியதாக இருந்துள்ளார். முதலில் மறுத்து வந்த கிஷோரை நிதிஷ் குமார் சமாதானப்படுத்தி கட்சி தலைமையை ஏற்க சம்மதிக்க வைத்துள்ளதாக தெரிகிறது.
  Published by:Saravana Siddharth
  First published: