தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார்... நாளை பதவியேற்பு

நிதிஷ் குமார்.

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் நாளை பதியேற்கவுள்ள நிலையில், இரு துணை முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  பீகாரின் முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ் குமார் திங்கட்கிழமை மாலை பதவியேற்க உள்ளார். மேலும், பாஜகவின் தர்கிஷோர் மற்றும் ரேணு தேவி துணை முதலமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் முன்று கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவு கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, பாட்னாவில் உள்ள நிதிஷ் குமார் இல்லத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.

  Also read: கேந்திரிய வித்யாலயாவில் தமிழ்மொழி மீது ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் - சீமான் எச்சரிக்கை

  இந்த கூட்டத்தின் முடிவில், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் பாகு சவுகானை சந்தித்த நிதிஷ் குமார், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன், எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தையும் வழங்கினார். இதன் மூலம், 4-வது முறையாக தொடர்ந்து முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்கவுள்ளார்.  இதனிடையே, பீகார் சட்டப்பேரவை பாஜக தலைவராக தர்கிஷோர் பிரசாத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தர்கிஷோர் மற்றும் பாஜகவின் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், நிதிஷ் குமார் எதுவும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதேவேளையில், பாஜக 74 இடங்களில் வென்றது. இதனால், இரு துணை முதலமைச்சர்கள் என்பதை நிதிஷ் குமாரால் தட்டிக்கழிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
  Published by:Rizwan
  First published: