Home /News /national /

இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு.. சுதந்திர தினத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு.. சுதந்திர தினத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

20 லட்சம் புதிய வேலை என நிதீஷ் குமார் அறிவிப்பு

20 லட்சம் புதிய வேலை என நிதீஷ் குமார் அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் துறைகளில் தலா பத்து பத்து லட்சம் என 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு  வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். அதேபோல், அனைத்து மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினர்.

    பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். தனது உரையில், மாநிலத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்த புதிய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கி தரும். அதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் துறைகளில் தலா பத்து, பத்து லட்சம் என 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் விதமாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீன முறை விவசாயத்திற்கு சுமார் 1.50 லட்சம் பேர் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். நமது சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறுவோம் என பேசினார்.


    பீகாரில் கடந்த வாரம் தான் புதிய கூட்டணி அமைந்து ஆட்சி மாற்றம் நடைபெற்றது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட முதலமைச்சர் நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசை அமைத்தார். எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இருந்த போது பீகாரில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்பு தேவை என தொடர்ந்து தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: அடிமை மனோபாவத்திற்கு முடிவுரை எழுதி, நமது பெருமைகள் குறித்து கர்வம் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

    தற்போது அவரே நிதீஷ் குமாருடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராக உள்ள நிலையில், தேஜஸ்வி கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சுதந்திர தினத்தில் 20 லட்சம் வேலைகள் என்ற வாக்குறுதியை நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Jobs, Nitish Kumar

    அடுத்த செய்தி