Home /News /national /

’நான் பிரதமர் வேட்பாளரா?’ - ராகுல் காந்தியை சந்தித்த பின் நிதீஷ் குமார் விளக்கம்

’நான் பிரதமர் வேட்பாளரா?’ - ராகுல் காந்தியை சந்தித்த பின் நிதீஷ் குமார் விளக்கம்

ராகுல் காந்தியுடன் நிதீஷ் குமார் சந்திப்பு

ராகுல் காந்தியுடன் நிதீஷ் குமார் சந்திப்பு

ராகுல் காந்தியை சந்தித்த நிலையில் இன்று மற்றொரு எதிர்க்கட்சி தலைவரான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை நிதீஷ் குமார் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று மாலை சந்தித்தார். டெல்லியில் ராகுல் காந்தி வசிக்கும் துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், மாநில கட்சிகளை பலவீனமாக்க தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். வரப்போகும் பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,  தன்னை பிரதமர் வேட்பாளராக ஒரு போதும் முன்னிறுத்த போவதில்லை என்றார்.

    ராகுல் காந்தியை சந்தித்த நிலையில் இன்று மற்றொரு எதிர்க்கட்சி தலைவரான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை நிதீஷ் குமார் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலரை நிதீஷ் குமார் சந்திக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக நிதீஷ் குமார் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக அவர் முதலில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை பீகார் தலைநகர் பாட்னாவில் சந்தித்து எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து ஆலோசித்தார்.

    இதையும் படிங்க: "மக்கள் பொருள்களை வாங்குகிறார்கள்.. பா.ஜ.க எம்.எல்.ஏக்களை வாங்குகிறது".. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சாடல்!

     

    கடந்த 2020ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் கட்சி ஆட்சியை பிடித்தது. பின்னர், சுமார் 2.5 வருட ஆட்சிக்குப் பின் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி எதிரணியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணி அரசை  நிதிஷ் அமைத்தார். இதை தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான அரசியல் நகர்வுகளை அவர் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Delhi, Nitish Kumar, Rahul gandhi

    அடுத்த செய்தி