புதிதாக ஆட்சியமைப்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்யும் - நிதிஷ்குமார்..

பிதமர் மோடி - நித்திஷ் குமார்

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம், பாட்னாவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. சத்தீஷ்கர் முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பீகாரில் புதிதாக ஆட்சியமைப்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏ-க்கள் ஞாயிற்றுக்கிழமை கூடி முடிவுசெய்வார்கள் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சி 43 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், பாஜக 74 இடங்களைப் பிடித்துள்ளது. இதனால், முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் தேர்வுசெய்யப்படுவதில் சிக்கல் நிலவுகிறது.

  இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம், நிதிஷ்குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமார், பாஜக சார்பில் துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஜித்தன் ராம் மஞ்சி, விகாஷீல் இன்சான் கட்சியின் முகேஷ் சாஹ்னி ஆகியோர் கலந்துகொண்டனர்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்களின் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12-30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். இதில், புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்தும் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

  இந்நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் பதவிவிலகியுள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரை சந்தித்து அவர் வழங்கினார்.

  Also read... எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.. ராணுவ வீரர்கள் 3 பேர் உட்பட 6 பேர் உயிரிழப்பு..  இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம், பாட்னாவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. சத்தீஷ்கர் முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறிவரும் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை அனைத்துக் கட்சிகளுக்கும் அளித்ததாகவும், அப்போது எந்தவொரு குற்றச்சாட்டும் எழவில்லை என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  Published by:Vinothini Aandisamy
  First published: