Home /News /national /

பீகார் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் அரசு வெற்றி..பாஜக வெளிநடப்பு

பீகார் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் அரசு வெற்றி..பாஜக வெளிநடப்பு

பீகார் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி

பீகார் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து களம் காண வேண்டும் என நிதீஷ் குமார் அழைப்புவிடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகாரில் மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியான பாஜக அவையில் வெளிநடப்பு செய்தது.

    முன்னதாக, பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசை அமைத்துள்ளார். கூட்டணியில் தேஜ்ஸவி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு 79 எம்எல்ஏக்களும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்களும் உள்ளனர். முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    இந்த புதிய கூட்டணி அரசிற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹா இருந்துவந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை சபாநாயகராக இருக்கும் மகேஷ்வர் ஹசார் அவை நடவடிக்கைகளை சபாநாயகர் பொறுப்பை ஏற்று அவையை நடத்தினார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் பாஜக தலைவர் தரிக்ஷோர் பிரசாத் புதிய அரசை கடுமையாக விமர்சித்து, முதலமைச்சர் நிதீஷ் குமாரால் ஏமாறாத நபரே இல்லை என குற்றஞ்சாட்டினார். பின்னர் அவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

    பாஜகவுக்கு பதிலடி தந்த பேசிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், "மாநிலங்களை தோல்வி பயம் வரும் போது எல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தொல்லை தருகிறது. பீகார் வளர்ச்சிக்காக ஆர்ஜேடி, ஜேடியு அமைத்த கூட்டணி நீண்ட கால கூட்டணி. இந்த கூட்டணி அவுட் ஆகாமல் நீண்டகாலம் தொடர்ந்து நிற்கும்" என்றுள்ளார்.

    இதையும் படிங்க: பல கோடிகள் பேரம் பேசி ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக சதி; அரவிந்த் கெஜ்ரிவால் புகார்!

    பின்னர் பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமார்,"ஏழு கட்சிகள் ஒன்று சேர்ந்து பீகாரில் அரசு அமைத்துள்ளது. நாங்கள் பீகார் வளர்ச்சிக்காக பாடுபட உறுதிமொழி ஏற்றுள்ளோம். நாட்டின் பல கட்சி தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 2024 தேர்தலில் களம் காண வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Nitish Kumar

    அடுத்த செய்தி