சிபிஐ-யின் புதிய செய்தித் தொடர்பாளராக நிதின் வகாங்கர் நியமனம்

லஞ்ச வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி, அஸ்தானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

Web Desk | news18
Updated: January 12, 2019, 11:20 AM IST
சிபிஐ-யின் புதிய செய்தித் தொடர்பாளராக நிதின் வகாங்கர் நியமனம்
நிதின் வகாங்கர்
Web Desk | news18
Updated: January 12, 2019, 11:20 AM IST
சிபிஐ செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் தயாள் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்கு பதில் நிதின் வகாங்கர் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து தீயணைப்புத் துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா, அந்த பொறுப்பை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், சிபிஐ செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் தயாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய வீட்டு வசதித் துறையின் கீழ் இயங்கும் பப்ளிகேஷன்ஸ் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். சிபிஐ புதிய செய்தித் தொடர்பாளராக நிதின் வகாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தகவல் மற்றும் ஒளிபரப்பு, பாதுகாப்பு துறை அமைச்சகங்களில் பணியாற்றியவர்.

Alok-Verma | சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா


அவர் தவிர இணை இயக்குநர்கள் அந்தஸ்தில் இருந்த 4 அதிகாரிகளை மாற்றம் செய்து சிபிஐ பொறுப்பு இயக்குனர் நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளார். மும்பை இணை இயக்குனர் அம்ரித் மோகன் பிரசாத்துக்கு கூடுதலாக சென்னை இணை இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை இணை இயக்குனராக இருந்த பிரவீன் சின்ஹாவுக்கு டெல்லி எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி, சிறப்பு இயக்குநர் அஸ்தானா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்கை 10 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

CBI, Lok Ranjan, Nageswara Rao
சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ்
Loading...
இதனால் அஸ்தானா விரைவில் கைதாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தன்னை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Also see... ஸ்டாலினுக்கு பாஜக மீது ஈர்ப்பு: தமிழிசை பதிலடி
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...