ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இதற்காக
காங்கிரஸ் கட்சி பலமடைவதற்காக மனதார வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது- ஜனநாயகத்திற்கு ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்ற 2 சக்கரங்கள் உண்டு. ஜனநாயகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு வலுவான எதிர்க்கட்சி அமைய வேண்டும். இந்த நோக்கத்திற்காக காங்கிரஸ் கட்சி பலம் அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் பலவீனம் அடைந்திருப்பதால் அதனுடைய இடத்தை மாநில கட்சிகள் நிரப்பி விடுகின்றன. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. மக்களவை தேர்தலில் வாஜ்பாய் தோல்வி அடைந்தபோதும், அவருக்கு ஜவகர்லால் நேரு மரியாதை அளித்தார். இது அரசியல் நாகரிகத்திற்கு ஓர் உதாரணம்.
இதையும் படிங்க - பெண்ணின் உடையை நாள் முழுவதும் அணியும் ஆண்கள்... கேரளாவில் வினோத கோவில் திருவிழா
மாநில தேர்தல்கள் தோல்வியால் காங்கிரஸ் கட்சி மனம் தளர்ந்துவிட வேண்டாம். அக்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். ஒருநாள் தோல்வி அடைகிறோம் என்றால் இன்னொருநாள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தொடக்கத்தில் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். அயராத உழைப்பு காரணமாக பாஜக இன்று ஆளும் கட்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.