Home /News /national /

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் மாற்றம்.. மூத்த அமைச்சர் நீக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி

பாஜக ஆட்சிமன்றக் குழுவில் மாற்றம்.. மூத்த அமைச்சர் நீக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி

நிதின் கட்கரி - சிவ்ராஜ் சிங்ஹ் சவுகான்

நிதின் கட்கரி - சிவ்ராஜ் சிங்ஹ் சவுகான்

BJP | பாரதிய ஜனதா கட்சியின் தினசரி முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்ற குழுவில் அதிரடி மாற்றங்களை செய்து புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பாரதிய ஜனதாவில் அதன் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் இன்னும் பத்து தலைவர்கள் சேர்ந்து இருக்கும் அந்த பாராளுமன்ற குழுவில், பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, கே.லக்‌ஷ்மன், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யாநாராயணன் ஜாதியா, பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் உள்ளனர். இப்போது அந்த குழுவில் எடியூரப்பாவும் சர்பானந்தா சோனோவாலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜகவின் மூத்த அமைச்சரான நிதின் கட்கரியும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மத்திய தேர்தல் குழுவிலும் மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், கே.லக்‌ஷ்மனும் சேர்த்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கட்சியின் தலைமை. இந்த முடிவு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூஸ் 18 க்கு பேட்டியளித்த லக்‌ஷ்மண், “தென்னிந்திய மக்கள் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களை எதிர்நோக்கி உள்ளனர். நான் எனது மாநிலத்தில் அவரது குரலாக ஒலிப்பேன்” என தெரிவித்தார்.

    மேலும் இந்த நியமணம் மிகவும் நேர்த்தியான ஒன்று என்றும் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். வடகிழக்கிலிருந்து சர்பானந்தா சோனோவாலும், தெற்கிலிருந்து எடியூரப்பாவும், லக்‌ஷ்மணனும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். மேலும் சீக்கியரான இக்பாலும் இதில் இடம் பெற்றுள்ளார்.

    Also Read : டெல்லியில் பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த நினைவுபரிசு என்ன தெரியுமா?

    சுதா யாதவின் கணவர் கார்கில் போரில் உயிரிழந்த தியாகி ஆவார். அவருக்கு பதவியளிப்பதன் மூலம், பாஜக ராணுவ வீரர்களின் குடும்பங்களை எப்படி மதிக்கிறது என்பது வெளிபடுகிறது. அதுமட்டுமின்றி கட்சியின் தொடக்க காலத்திலிருந்து உழைத்த எடியூரப்பா, சத்திய நாராயணா ஜாதியா, லக்‌ஷ்மணுக்கும் பதவி அளிக்கப்பட்டு கட்சிக்காக உழைத்தவர்களும் அங்கிகரிக்கப்பட்டுள்ளார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    மேலும், மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டேவுடன் பாஜக ஆட்சி அமைக்க காரணமாக இருந்த தேவேந்திர பட்னாவிஸுக்கும் தெலுங்கானாவில் கட்சியை இன்னும் பலப்படுத்த லக்‌ஷ்மண் அவர்களுக்கும் பதவியளிக்கப்பட்டுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: BJP, Nitin Gadkari, Sivraj singh chouhan

    அடுத்த செய்தி