கொரோனா பரவல்- செப்டம்பருக்குள் செய்யுங்கள்: நிதி ஆயோக் வழங்கிய முக்கிய பரிந்துரை!

மாதிரிப்படம்

2021ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்த நிலையில், அதில் 21.74 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலை தேவைப்பட்டது.

 • Share this:
  கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்று கருதப்படும் நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் ஐ.சி.யு. படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

  இந்தியாவில் தற்போது நாளோன்றுக்கு சராசரியாக 30 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் மீண்டும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே, அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், வி.கே.பால் தலைமையிலான நிதி ஆயோக் குழுவினர் கடந்த மாதம் அரசுக்கு வழங்கிய பரிந்துரையில், 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களில் 23 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.  கடந்த ஆண்டு செப்டம்பரில் 100 பேரில் 20 சதவீதம் பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 50 பேர் கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மீதமுள்ளவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெறலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

  இதையும் படிங்க: சுதாரித்த ஓட்டுநர்.. நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள் - வைரல் வீடியோ
  நடப்பாண்டு  ஏப்ரல்- ஜூன்மாத  நிலையை அடிப்படையாக கொண்டு இந்த எண்ணிக்கையை உயர்த்தி நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. 2021ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்த நிலையில், அதில் 21.74 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலை தேவைப்பட்டது. இதில் 2.2 சதவீதம் பேர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டனர்.

  மேலும் படிக்க: முதலிரவுக்காக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை வாடகைக்கு விட்ட பல்கலை அதிகாரிகள்!


  இதை கணக்கில் வைத்து தற்போது, செப்டம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் ஐ.சி.யு. படுக்கைகளை தயாராக வைத்திருக்கும்படி நிதிஆயோக் பரிந்துரைத்துள்ளது. இதில், 1.2 லட்சம் படுக்கைகள் செயற்கை சுவாசம் வசதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும்,  ஐ.சி.யு. அல்லாத 7 லட்சம் படுக்கைகள் (இதில் 5 லட்சம் படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்க வேண்டும்), 10 லட்சம் கோவிட் தனிமை படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: