Home /News /national /

தரமான பள்ளிக்கல்வி வழங்கும் பட்டியலில் டாப் இடத்தில் கேரளா, தமிழகம்... பின்தங்கிய நிலையில் உ.பி, பீகார்...!

தரமான பள்ளிக்கல்வி வழங்கும் பட்டியலில் டாப் இடத்தில் கேரளா, தமிழகம்... பின்தங்கிய நிலையில் உ.பி, பீகார்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதில் முதலிடத்தை கேரளாவும், இரண்டாம் இடத்தை தமிழகம் இடம் பிடித்துள்ளன. உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

    நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களின் கல்வித் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிதி ஆயோக் வகைப்படுத்தியுள்ளது. அந்த தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் இன்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 20 பெரிய மாநிலங்களில் 82.2 சதவீதத்துடன் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு 73.4 சதவீதத்துடன்இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஜார்கண்ட் மாநிலம் 30.6 சதவீதத்துடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

    பீகார் 37.3 சதவீத்துடனும், உத்தரப் பிரதேசம் 39 சதவீதத்துடன் கடைசியிலிருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த வருடத்தை ஒப்பிடும் இந்தமுறை நல்ல முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

    பள்ளிக் கல்வியின் தரத்தை, கட்டுமானம், கற்றுக்கொள்ளும் முறை, ஆகிய வரையறைகளின் கீழ் சர்வே முறையில் தகவல்களைச் சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிய மாநிலங்களில், மணிப்பூர் சிறப்பான செயல்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Niti Aayog, School

    அடுத்த செய்தி