முகப்பு /செய்தி /இந்தியா / இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்? நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு

இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்? நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு

காஷ்மீர் இணையம்

காஷ்மீர் இணையம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர இணையதளத்தைக் கொண்டு காஷ்மீரில் எதுவும் பார்க்கப்போவதில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், ‘எதற்காக அரசியல்வாதிகள் காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்? டெல்லியில் நடைபெறும் போராட்டங்கள் போல காஷ்மீரில் உருவாக்குவதற்காகத்தான் அவர்கள் அவ்வாறு விரும்புகிறார்கள். மேலும், சமூக வலைதளங்களைக் கொண்டு போராட்டத்தின் மீது எண்ணெயையை ஊற்றப்பார்க்கிறார்கள்.

இணையதளம் இல்லாததால் அங்கு என்ன குறை ஏற்பட்டுவிட்டது? இணையம் மூலம் அங்கு என்ன நடக்கிறது? அங்கே ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. நான், என்ன சொல்லவருகிறேன் என்றால்? காஷ்மீரில் இணைய வசதி இல்லாததால் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

 

First published:

Tags: Jammu and Kashmir