நெருப்புடா... நித்திடா... - நித்தியானந்தா உருவாக்கிய கைலாஷ் தனிநாடு

Nithyananda Kailash Country

  • News18
  • Last Updated: December 3, 2019, 11:33 PM IST
  • Share this:
நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்தியானந்தா கைலாஷ் என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி வருகிறார்.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கே இந்து நாடு அமைக்கப் போகிறார் நித்யானந்தா என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கையில், எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா. தனக்கென தனி நாடு, தனிக்கொடி, தனிச்சின்னம் என்று பயணித்துவரும் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது பரமரகசியம். ஆனால், தினமும் சமூக வளைதங்களில் பேசுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரகசியத்தை வெளியிட்டுவருகிறார் நித்யானந்தா.
நித்யானந்தாவின் தனிநாடு கனவு இப்போது தொடங்கியதில்லை. பல ஆண்டுகளாக தனிநாடு முயற்சியை மேற்கொண்டுவருகிறார். தென்அமெரிக்க நாட்டில் உள்ள தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.

தன்னை வாழும் சதாசிவன் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா, 2004-ம் ஆண்டு சத்யசாயிபாபா, தனக்கு தங்கக்கிரீடமும், தங்கப் பாதுகைகளும் அளித்து தன்னை அவரது அவதாரமாக ஏற்றுக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடிப் பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா.

ஒருபக்கம் தனிநாடு விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவில் நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமம் இழுத்து மூடப்பட்டது. ஆசிரமத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பிராணப்ரியா, பிரியதத்துவா ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் இருவரையும் ஜாமினில் வெளியே விட குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. டிசம்பர் 10-ம் தேதி, கடத்தப்பட்டதாக சொல்லப்படும் சிறுமிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்து என்ன என்ற பரபரப்பு அதிகரித்துவருகிறது.

கைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். 

Also see:


 
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading