Home /News /national /

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சி: அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கண்காட்சி!

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சி: அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கண்காட்சி!

கைவினைப் பொருள்கள் கண்காட்சியைப் பார்வையிடும் நிட்டா அம்பானி, இஷா அம்பானி

கைவினைப் பொருள்கள் கண்காட்சியைப் பார்வையிடும் நிட்டா அம்பானி, இஷா அம்பானி

இஷா அம்பானி திருமண முன் நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பாரம்பரிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி உலகப் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  • News18
  • Last Updated :
    அனில் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணத்தின் ஒரு பகுதியாக ப்ரீ வெட்டிங் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியை நிட்டா அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் பார்வையிட்டனர்.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமணம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அந்தத் திருமணத்தின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி கடந்த இரண்டு தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுதேசி பஜாரில் 108 பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்கள் அடங்கிய மிகப்பெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியில் இந்திய அளவிலுள்ள சிறந்த கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

    கண்காட்சியைப் பார்வையிட்ட இந்திய பாரம்பரிய கைவினைப் பொருள்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள், தொழில் அதிபர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த இடத்தில் மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜம்தானி, குஜராத்தைச் சேர்ந்த படோலா, காஷ்மீரைச் சேர்ந்த பாஷ்மினா கனி, அஸாமைச் சேர்ந்த மேகலா சாடோர் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உடை வகைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காந்தா, இமாலச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சம்பா ருமல், பீகாரைச் சேர்ந்த சுஜினி, காஷ்மீரைச் சேர்ந்த காஷிதகாரி உள்ளிட்ட சிறந்த எம்ராய்டரி கலைஞர்களின் பொருள்களும் இடம்பெற்றிருந்தன.

    அதேப்போல உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம், சங்கான்காரி, பந்தேஜ் பகுதி கைவினைப் பொருள்களும் இடம்பெற்றிருந்தன. அந்தக் கண்காட்சியை இன்று நிட்டா அம்பானியும், இஷா அம்பானியும் சென்று பார்வையிட்டனர்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Isha Ambani

    அடுத்த செய்தி