நிர்வான் என்ற பதினைந்து மாத குழந்தை அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க 17.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அவரது பெற்றோரிடம் அவ்வளவு வசதி இல்லாத காரணத்தினால் தங்கள் மகனின் உயிரைக்காப்பாற்ற தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த சாரங் மேனன் - அதிதி நாயர் தம்பதியினருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நிர்வான் என்ற அக்குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகியும் தவழ முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்துள்ளார். சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது தான் நிர்வான் spinal muscular atrophy என்ற அரிய வகை முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் நிர்வானை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரே ஒரு மருந்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர். அந்த மருந்தின் விலை மட்டும் 17.5 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிர்வானின் பெற்றோரால் சிகிச்சைக்கு தேவையான இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாததால், தங்கள் மகனை காப்பாற்ற பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இதுவரை 1 கோடி 16 லட்சம் ரூபாய் மட்டுமே உதவியாக கிடைத்துள்ள நிலையில், மேலும் 16 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் தேவைப்படுகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் நாட்கள் செல்ல செல்ல மகனை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என குழந்தையின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
இதனால் தமிழக அரசு உதவி செய்தால் தங்கள் மகனை காப்பாற்ற முடியும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த செய்தியை பார்ப்பவர்களும் தங்களால் ஈன்ற உதவியை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 50 ரூபாய் அல்லது அதற்கு மேல் நன்கொடையாக தந்து தமிழக மக்கள் உதவ வேண்டும் எனவும் நிர்வானின் பெற்றோர் கோரிக்கை கோரிக்கைவிடுத்துள்ளனர்.
உதவிக்கு பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விவரம் :
*Milap Fund Raiser:
https://milaap.org/fundraisers/support-nirvaan-a-menon
Account number: 2223330071555889
IFSC CODE: RATN0VAAPIS (The Digit After N is Zero)
Account Name: Sarang Menon-Milaap
UPI ID : givetomlp.nirvaanamenon1@icici
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Tamil Nadu