முகப்பு /செய்தி /இந்தியா / உண்மையைத் தேடாமல் கடவுளை குற்றம் சாட்டுகிறார் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

உண்மையைத் தேடாமல் கடவுளை குற்றம் சாட்டுகிறார் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம்சாட்டியுள்ளார் என ராகுல் காந்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உண்மையைத் தேடாமல் இருக்கும் ஒருவர், பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டியுள்ளார் என ராகுல் காந்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “40 ஆண்டுகளில் நாடு முதன்முறையாக நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சோகம்” என மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வீடியோவில் “அசாதியாகிராஹி” (உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாத ஒருவர்) வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டி உள்ளார்

Arthavyavastha ki baat Rahul Gandhi ke saath அல்லது ‘ராகுல் காந்தியுடன் பொருளாதாரத்தின் நிலை’ என்ற வீடியோ தொடரில், பாஜக அரசு பொருளாதாரத்தின் முறைசாரா கட்டமைப்பைத் குலைத்து மக்களை அடிமைகளாக மாற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய நாட்டின் அமைப்புசாரா துறை பலமாக இருக்கும்வரையில் எந்த பொருளாதார சரிவும், இந்தியாவை வீழ்த்த முடியாது என்று மன்மோகன் சிங் தனக்கு விளக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, பாஜக அரசு முறைசாரா துறையைத் குலைத்து அழித்துவருகிறது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி மற்றும் கொரோனா ஊரடங்கு செயல்பாடுகள் ஆகியவை இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாக  இருக்கின்றன.

மேலும் படிக்க:  ஒரு ரூபாய் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம் - கையில் ஒரு ரூபாயுடன் புகைப்படம் பதிவிட்ட பிரசாந்த் பூஷன்

முறைசாரா துறையில் பணிபுரியும் 40 கோடி மக்கள் கடுமையான வறுமையை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி,  "முறைசாரா துறை 90 சதவீதத்திற்கும மேற்பட்ட வேலைகளை உருவாக்குவதால் இந்தியா வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. 45 ஆண்டுகளில் வேலையின்மை மிக அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தார்

மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது, எனவே இதை எதிர்த்து நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

First published:

Tags: Demonetisation, GST, Minister Nirmala Seetharaman, RahulGandhi