வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாசித்தார். இன்று காலை 11 மணி அளவில் துவங்கிய மத்திய நிதி நிலை அறிக்கை சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.
கடந்த 2 ஆண்டுக்கால மோடி அரசின் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளால் சுமார் 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் உருவாகியுள்ளனர் என்றும் ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 40 கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜிஎஸ்டி மூலமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்களுக்கு பணப்பலன் கிடைத்துள்ளது என்றார்.
2006-16 -ம் ஆண்டு காலத்தில் 27 கோடியே 10 லட்சம் பேர் வறுமை கோட்டுக்கு மேல் வந்துள்ளனர் என்றும் மத்திய அரசின் கடன் அளவு 52.2 சதவீதத்தில் இருந்து 48 .7 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மத்திய நிதிநிலை அறிக்கை மூன்று மணிநேரம் வரை நீடித்ததால், சற்று உடல் நலம் குன்றியிருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க முடியாமல், பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.