'மரியாதை எனும் நற்பண்பு நிர்மலா சீதாராமனிடம் உள்ளது’- சசி தரூர் புகழாரம்!

தலையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ள சசி தரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'மரியாதை எனும் நற்பண்பு நிர்மலா சீதாராமனிடம் உள்ளது’- சசி தரூர் புகழாரம்!
சசி தரூர்
  • News18
  • Last Updated: April 16, 2019, 12:40 PM IST
  • Share this:
தலையில் காயமடைந்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரளாவின் திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சசி தரூர் நேற்று கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் துலாபாரம் நிகழ்வில் பங்கேற்ற போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது தலையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேர்தல் பிரசார காலத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசி தரூரை பாஜக மூத்தத் தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தார்.


இதுகுறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் தேர்தல் நேரத்தின் போதும் தனது இடைவிடா பணிக்காலத்தில் இன்று காலை நிர்மலா சீதாராமன் என்னைச் சந்திக்க வந்தது நெகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலில் மரியாதை என்பதெல்லாம் ஒரு நல்ல பண்பாகும். அந்த பண்பை நடைமுறைப்படுத்தும் நிர்மலா சீதாராமனை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிடுள்ளார்.மேலும் பார்க்க: தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்