• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

அரசின் சொத்துக்களை பணமாக்கலுக்கான ஒரு செயல் திட்டம்.

  • Share this:
    பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைக்கிறார்.

    கடந்த மத்திய பட்ஜெட்டில், நாட்டில் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களில், ஏற்கனவே இருக்கும் பொது கட்டமைப்புகளை விற்பனை செய்வதும் ஒன்று என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

    அத்துடன், இதற்காக புதிய திட்டம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக, முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்கு தெரிவுநிலையை வழங்குவதற்கும் ஒரு பணமாக்கல் வழிமுறையை கொண்டு வருவதற்கான திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.

    Must Read : முதலிரவுக்காக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை வாடகைக்கு விட்ட பல்கலை அதிகாரிகள்!

    அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டு உள்ள இந்த என்.எம்.பி. திட்டத்தை நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தத் திட்டம், தனியார் முதலீட்டாளர்களுக்கு தெரிவுநிலையை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், அரசின் சொத்து பணமாக்கலுக்கான ஒரு செயல் திட்டமாகவும் இந்த திட்டம் செயல்படும் என்று கூறப்படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: