'ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜ.க வழங்கியுள்ளது’ - நிர்மலா சீதாராமன்

“ரஃபேல் விவகாரத்தில் ஊழல் ஏதுமில்லை. தவறான பரப்புரைகள் நிற்காது".

Web Desk | news18
Updated: April 1, 2019, 12:10 PM IST
'ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜ.க வழங்கியுள்ளது’ - நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Web Desk | news18
Updated: April 1, 2019, 12:10 PM IST
’நாடு தான் முக்கியம். பாலகோட் தாக்குதலுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நியூஸ் 18 தொலைக்காட்சி குழுமத்தின் அஜெண்டா இந்தியா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், “எவ்வித பயமும் இல்லாமல் சொல்கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. அந்நாட்டில் தீவிரவாத முகாம்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. அதனால்தான் சர்வதேச அரங்கில் விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பாகிஸ்தானை தனிமைப்படுத்துகிறோம். தொடர்ந்து பாகிஸ்தான் சட்டங்களைப் புறக்கணித்து தீவிரவாதத்தின் மீது ஆர்வம் செலுத்துகிறது” என்றார்.

மேலும் நிர்மலா சீதாராமன், பாலகோட் விமானத் தாக்குதல் மீது பாஜக தலைவர்கள் பெயர் எடுத்துக்கொள்வதில் தவறு ஏதுமில்லை என விளக்கினார். “ரஃபேல் விவகாரத்தில் ஊழல் ஏதுமில்லை. தவறான பரப்புரைகள் நிற்காது. அதனால்தான் எதிர்கட்சியினர் இப்போது சவுகிதார் நோக்கி நகர்ந்துள்ளார்கள். ’வறுமையை ஒழிப்போம்’ என்று காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதி என்னவானது? வறுமை ஒழியவில்லையே? முதன்முறையாக ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக வழங்கியுள்ளது. ஆனால், பிரதமரை ராகுல் ‘திருடன்’ என்றழைக்கிறார்” என்றார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading...
மேலும் பார்க்க: #EXCLUSIVE: மத்தியில் பாஜக அரசு மாறினால் தமிழக அரசு கலைந்துவிடும் - ப.சிதம்பரம்
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...