கொரோனாவால் பாதித்த பொருளாதாரத்திற்கு உயிரூட்டி வருகிறோம் - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

கடன் உத்தரவாத திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி சேவைகள் துறையின் மூலம் வாரந்தோறும் கண்காணிப்பேன்.

  • Share this:
    டெல்லியில் 6.29 லட்சம் கோடி ரூபாய் சலுகை தொகுப்புகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவால் பாதித்த பொருளாதாரதிற்கு உயிரூட்டி வருகிறோம் என்று கூறினார்.

    கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலை காரணமாக சுகாதாரத்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளால், பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கான கடன் உத்தரவாத திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம், சுகாதாரம் மற்றும் மருத்துவ உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி உத்தரவாதம் அளிப்பதாகும்.

    இந்த திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், “எதிர்காலத்தில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு மெட்ரோ அல்லாத நகரங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது.

    கிராமப்புறப் பகுதிகளிலும், இரண்டாவது நிலை, மூன்றாவது நிலை நகரங்களிலும் மருத்துவ திறன்களை அதிகரிப்பது மிகமும் அவசியமானது. சுகாதார உள் கட்டமைப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றமும், பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவப்போகிறது. இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி சேவைகள் துறையின் மூலம் வாரந்தோறும் கண்காணிப்பேன்.

    இதில் தாமதங்களை சமாளிக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை நாங்கள் உயிர்ப்பித்து வருகிறோம். நாங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையை விரும்பவில்லை. எவ்வாறாயினும் அதை விட்டு விட முடியாது.

    Must Read : கொரோனா தடுப்பூசி: சொந்த சாதனையை முறியடித்தது இந்தியா!

    தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக எல்லா நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தியை நாட்டுக்கு வழங்குகிறோம்.”இவ்வாறு கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: