• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனாவிலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு - நிர்மலா சீதாராமன்

கொரோனாவிலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு - நிர்மலா சீதாராமன்

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

கடந்த 2020ஆம் நிதியாண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 141 ஆகவும், 2021ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 136 ஆகவும் அதிகரித்துள்ளது.

  • Share this:
    கொரோனா காலத்திலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

    இந்த நெருக்கடி கொரோனா காலத்திலும், செல்வந்தர்கள் பலர் தங்கள் செல்வத்தை பெருக்கி முன்னேறி வருகின்றனர். கடந்த 2018ஆம் நிதியாண்டில் ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை வெறும் 77 ஆக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.

    Must Read : சென்னை, தூத்துக்குடி உட்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்: நாசா எச்சரிக்கை

    அந்த வகையில், இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த 2020ஆம் நிதியாண்டில் இது 141 ஆகவும், 2021ஆம் நிதியாண்டில் 136 ஆகவும் அதிகரித்து இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த எண்ணிக்கையானது, மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த தகவல்களின்படி தெரிய வந்திருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: