பட்ஜெட் 2019: பேட்டரி வாகனங்கள், வருமான வரி உச்ச வரம்பு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

உலகின் தலைசிறந்த பேட்டரி வாகன உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பேட்டரி வாகனங்களை வாங்குவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி வட்டிக்கழிவு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: July 5, 2019, 7:29 PM IST
பட்ஜெட் 2019: பேட்டரி வாகனங்கள், வருமான வரி உச்ச வரம்பு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Web Desk | news18
Updated: July 5, 2019, 7:29 PM IST
மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.

2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், ”ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

இதன் மூலம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பே தொடரும் என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய பான்கார்டு இல்லாதவர்கள் ஆதார் கார்டை வைத்து பயன்படுத்தலாம்.  வருடத்துக்கு 5 கோடிக்கும் அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி விதிக்கப்படும்.

மேலும் உலகின் தலைசிறந்த பேட்டரி வாகன உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பேட்டரி வாகனங்களை வாங்குவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி வட்டிக்கழிவு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Also watch: வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநாநூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...