• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்கள்... பணமாக்குதல் திட்டம் : 6 லட்சம் கோடி ரூபாய் இலக்கு

25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்கள்... பணமாக்குதல் திட்டம் : 6 லட்சம் கோடி ரூபாய் இலக்கு

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்களும் இதில் அடக்கம்.

  • Share this:
    பயணியர் ரயில், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகளின் சொத்து விற்பனை வாயிலாக அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    அடிப்படை கட்டமைப்பு துறையில் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தேசிய பணமாக்குதல் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடிப்படை கட்டமைப்பு துறையில் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இதில் பொதுத் துறை நிறுவனங்களின் நிலங்கள் விற்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘கிடையாது’ என்பது தான் என் பதில். அதேசமயம் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க இந்த புதிய திட்டம் உதவும்.

    அதன்படி, பொதுத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், முதலீடுகளும் அதிகரிக்கப்படும். இந்த வகையில் கிடைக்கும் தொகை, அடிப்படை கட்டமைப்பு துறையில் மேலும் முதலீடு செய்ய பயன்படுத்தப்படும்.

    பொதுத் துறை நிறுவன சொத்துக்களின் உரிமை அரசிடமே இருக்கும். பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பின், அரசிடம் இருந்து பெற்ற பங்கை கட்டாயம் திரும்ப அளிக்க, புதிய திட்டத்தின் விதிமுறைகள் வழி வகுக்கின்றன.

    Must Read : கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும்... பிரதமர் அலுவலகத்தில் நிபுணர்கள் அறிக்கை

    பொதுத் துறை நிறுவன சொத்துக்களின் மதிப்பிற்கேற்ற பயனை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ள இதுவே சரியான தருணம் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இந்த திட்டத்தில் பயணியர் ரயில், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை, மொபைல் கோபுரம், மின் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைகளின் சொத்து விற்பனை வாயிலாக அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்களும் இதில் அடக்கம்.” இவ்வாறு அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: