Home /News /national /

Budget 2021: சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் இந்திய பொருளாதாரம் காக்கப்பட்டது- நிர்மலா சீதாராமன்

Budget 2021: சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் இந்திய பொருளாதாரம் காக்கப்பட்டது- நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாகக் நிதியமைச்சர் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இரண்டு உலகப் போர்களுக்கு பிறகு தற்போது உள்ள நிலையும், சமூக பொருளாதார மறு உருவாக்கம் தேவைப்படக்கூடிய அளவில் இருப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த தசாப்தத்தின் முதல் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டதாகக் கூறினார்.

    கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

    நடப்பு நிதியாண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா காலத்தில் உயிரிழப்பு இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ள வெற்றி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு உத்வேகத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார்.

    உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

    மேலும் படிக்க... Budget 2021: மதுரையில் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதாகக் கூறினார். தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Budget 2021, Nirmala Sitharaman, Union Budget 2021

    அடுத்த செய்தி