Home /News /national /

Headlines Today : நிர்மலா சீதாராமன் மீண்டும் எம்.பியாக தேர்வாகிறார் - தலைப்புச் செய்திகள் (மே 30-2022)

Headlines Today : நிர்மலா சீதாராமன் மீண்டும் எம்.பியாக தேர்வாகிறார் - தலைப்புச் செய்திகள் (மே 30-2022)

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Headlines Today : ராஜ்ய சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது, நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்படுகிறார்.

  மாநிலங்களவை தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்படுகிறார்.

  தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார்.

  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

  பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நேற்றுடன் நிறைவு. சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

  சென்னையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில், நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு.

  ஏற்காட்டில் 7 நாட்கள் கோடை விழாவின் ஒரு பகுதியாக கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டி நடத்தப்பட்டது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

  திருவாரூரில் தனது சகோதரரின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை ஆறு அத்தைகள் சேர்ந்து வெகு விமரிசையாக நடத்தியுள்ளனர்.

  வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்டு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

  தாங்கள் அனுப்பியிருந்த தலையாட்டி பொம்மைகள் குறித்து, பிரதமர் மோடி பேசியது பெருமையாக உள்ளதென தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியுள்ளனர்.

  நடிகர் விஜய் கால்ஷீட் கொடுத்தால் விக்ரம் - 3 படத்தில் இணைந்து நடிக்கத் தயார் என்றும், சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  திருப்பதி - திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால், இலவச வரிசையில் 10 மணி நேரத்திற்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  பஞ்சாப் மாநிலம் மானசாவில் காங்கிரஸ் நிர்வாகியும், பாடகருமான மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் வீசிய புழுதி புயலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆதார் நகல்களை தரக்கூடாது என்ற மத்திய அரசின் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால் நடவடிக்கை.

  கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நாளை 11வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நிதி, 10 கோடி பேருக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  துபாய், சுவிட்சர்லாந்து நாடுகளை தொடர்ந்து ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

  உக்ரைன் போரால் வட இந்தியாவின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள சப்பாத்திக்கு தட்டுப்பாடு வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

  நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் மாயமான விமானம், மஸ்டேங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  Must Read : மோசடி ரம்மி... நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் - டிஜிபி சைலேந்திர பாபு

  பிரேசிலில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற 12வது தேசிய அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் உத்தரப்பிரதேசம் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், நடப்புச் சாம்பியனான ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Today news, Top News

  அடுத்த செய்தி