வறுமையை ஒழித்திருந்தால் நியாய் திட்டம் ஏன்? காங்கிரஸூக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

ஊழல் இல்லாத அரசை நாங்கள் மக்களுக்கு அளித்துள்ளோம். மோடியை ராகுல்காந்தி திருடன் என்று அழைக்கிறார். எந்த அடிப்படையில் அவ்வாறு அழைக்கிறார்?

news18
Updated: April 1, 2019, 3:43 PM IST
வறுமையை ஒழித்திருந்தால் நியாய் திட்டம் ஏன்? காங்கிரஸூக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
news18
Updated: April 1, 2019, 3:43 PM IST
வறுமையை காங்கிரஸ் கட்சி ஒழித்திருந்தால் ஏன் நியாய்(NYAY)  திட்டம் தேவைப்படுகிறது என்று நியூஸ் 18 சார்பில் நடைபெற்ற ’அஜெண்டா இந்தியா’ மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நியூஸ் 18 செய்தி நிறுவனம் சார்பில் அஜென்டா இந்தியா என்ற தலைப்பில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்வில், காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், மனிஷ்திவாரி, பா.ஜ.க தலைவர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அப்போது நிர்மலா சீதாராமன், ‘நாட்டைப் பலப்படுத்துவதற்காக இந்திரா காந்தி போருக்குச் சென்றாரா? அல்லது அந்தப் போரை அவர் தேர்தலுக்காகச் செய்தாரா? பிரதமர் மோடியைப் பற்றி காங்கிரஸ் கூறுவது தவறானது. உங்கள் தலைவரைப் பற்றி உங்களால் எதுவும் கூற முடியாது. தகுதியான தலைமைக்கு நாங்கள் உரிமை கோருகிறோம்.

ஊழல் இல்லாத அரசை நாங்கள் மக்களுக்கு அளித்துள்ளோம். மோடியை ராகுல்காந்தி திருடன் என்று அழைக்கிறார். எந்த அடிப்படையில் அவ்வாறு அழைக்கிறார்? அவரிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா? அரசியல்அல்லாத ஒரு விவகாரத்தில் ராகுல் காந்தி ஜாமினில்தான் வெளியில் இருக்கிறார். வறுமை என்ற தலைப்பு ராகுல் காந்தி குடும்பத்தினரின் வழக்கமான தலைப்பு.

ஆனால், இதுவரையில் காங்கிரஸ் வறுமையை அழிக்கவில்லை. ஒருவேளை காங்கிரஸ் வறுமையை ஒழித்திருந்தால் ஏன் நியாய்(NYAY) திட்டம் தேவைப்படுகிறது. காங்கிரஸின் மாதம் ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் பா.ஜ.கவின் திட்டத்தையும் ஒப்பிடும் விவாதம், ரஃபேல் ஒப்பந்த விலையில் பா.ஜ.கவின் விலையும், காங்கிரஸின் விலையையும் குறிப்பிடுகிறது.

ஒரு தொகுதியில் நீண்ட காலமாக எம்.பியாக இருந்தால், எதற்காக மற்றுமொரு தொகுதியில் போட்டியிடவேண்டியத் தேவை ஏற்படுகிறது. கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிடவுள்ள ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸூக்கு வாழ்த்துகள். ஏற்கெனவே, ராகுல் காந்தியைத் தோற்கடிக்க சி.பி.எம் வேலை செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடைபெற்றபிறகு, பாகிஸ்தானில் இருக்கும் ஒரு குழு, தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கிறது. ஆனால், பாகிஸ்தான் அதனை மறுக்கிறது’ என்று தெரிவித்தார்.
Loading...
Also see:

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626