Home /News /national /

ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? - கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்

ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? - கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்

தெலங்கானா மாவட்ட ஆட்சியருக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு

தெலங்கானா மாவட்ட ஆட்சியருக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு

ரேஷன் கடையில் பிரதமர் மோடி புகைப்படம் இல்லாதது ஏன் என தெலங்கானா மாவட்ட ஆட்சியரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Telangana, India
    தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஜஹீராபத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காமரெட்டி மாவட்டத்தின் ஆட்சியர் ஜிதேஷ் பாடீல் உடனிருந்தார். ஆட்சியர் ஜிதீஷ் பாடீலிடம் நிதியமைச்சர் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரசியில் மத்திய மாநில அரசுகளின் பங்குகள் என்ன என்ற விவரத்தை கேட்டறிந்தார். இந்த கேள்விக்கு விடை தெரியாமல் மாவட்ட ஆட்சியர் தடுமாறினார். இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் இதற்கான விடையை தெரிந்து கொண்டு சொல்லுங்கள் என்றார்.

    பின்னர் பேசிய நிதியமைச்சர், ரேஷன் கடைகளில் வழங்கும் அரசி, கோதுமை போன்றவற்றுக்கான நிதியில் பெரும் பங்கு மத்திய அரசு வழங்குகிறது. வெளி சந்தையில் ரூ.35க்கு கிடைக்கும் அரிசி, ரேஷன் கடைகளில் ரூ.1க்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் வழங்கும் அரசிக்காக மத்திய அரசு ரூ.30 பங்களிப்பு வழங்குகிறது. மாநில அரசோ ரூ.4 வழங்குகிறது. பயனாளர்களிடம் ஒரு ரூபாய் மட்டும் தான் வசூலிக்கப்படுகிறது.

    கோவிட் பெருந்தொற்று வந்த பின் 2020ஆம் ஆண்டு முதல் இலவச அரசி கோதுமையை மத்திய அரசே இலவசமாக வழங்கி வருகிறது என பங்களிப்பு விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை, சில இடங்களில் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியரிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார். பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனர் அல்லது படத்தை வைக்க வந்தால், அதை அகற்றாமல் வைத்திருக்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என நிதி அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திராவிட மாடல் புத்தகத்தை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

    பாஜக அல்லாது எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பான சலசலப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது நிதியமைச்சரே நேரடியாக இதை குறிப்பிட்டு பேசியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Nirmala Sitharaman, PM Modi, Ration, Ration Shop, Telangana

    அடுத்த செய்தி