நிர்மலா சீதாராமனுடன் ஹெச்.ஏ.எல் தலைவர் சந்திப்பு!

15,000 கோடி ரூபாய் கட்டண நிலுவையை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், நிதி நெருக்கடியால் 20 சதவீத ஒப்பந்தப் பணியாளர்களைக் குறைப்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 10:42 AM IST
நிர்மலா சீதாராமனுடன் ஹெச்.ஏ.எல் தலைவர் சந்திப்பு!
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Web Desk | news18
Updated: January 10, 2019, 10:42 AM IST
இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத் தலைவர் ஆர்.மாதவனுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் தகவல் அளித்துள்ளார்  என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

“அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது” என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றசட்டுக்கு பதிலளித்த அவர், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு இந்திய விமானப்படை சார்பில் 15 கோடி ரூபாய் அளவுக்கு கட்டண நிலுவை உள்ளதாகவும், இது வரும் மார்ச் மாதத்தில் 19,000 முதல் 20,000 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்றும் கூறினார்.

அதன் பிறகு இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத் தலைவர் ஆர்.மாதவன் மற்றும் 3 அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது 15,000 கோடி ரூபாய் கட்டண நிலுவையை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், நிதி நெருக்கடியால் 20 சதவீத ஒப்பந்தப் பணியாளர்களைக் குறைப்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தேவையற்ற பயணங்களை குறைத்தல் உள்ளிட்ட நிதிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.
Loading...
Also see... ராஜினாமா செய்யுங்கள்... நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் 
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...