• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • #Exclusive | ஏழைகளுக்கு நேரடி பண உதவி செய்வது மட்டுமே தீர்வல்ல - நிர்மலா சீதாராமன்

#Exclusive | ஏழைகளுக்கு நேரடி பண உதவி செய்வது மட்டுமே தீர்வல்ல - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman | "தொழிலாளர் சட்டங்களை திருத்துவது நாடாளுமன்ற ஆய்வுக்கு உள்பட்ட விஷயம்"

  • News18
  • Last Updated :
  • Share this:
    புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்த நிலையில், சமீபத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து கட்டங்களாக திட்டங்களை அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்குப் பின்னர் முதன் முறையாக நியூஸ் 18-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

    தொழிலாளர் சட்டங்களை திருத்துவது நாடாளுமன்ற ஆய்வுக்கு உள்பட்ட விஷயம் என்று கூறியுள்ள அவர், ஏழைகளின் கைகளுக்கு பணத்தை நேரடியாக கொடுப்பது மட்டுமே தீர்வல்ல என்று தெரிவித்துள்ளார்.



    மார்ச் மாதத்தில் ஊரடங்கை முதலில் அறிவித்த பின்னர், ஒரு நிவாரண பேக்கேஜ்-ஐ அரசாங்கம் கொண்டு வந்தது. அதில் இந்த காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் உணவு தானியங்கள் வழங்குதல் மற்றும் ஒரு சில பிரிவினருக்காக பணம் நேரடியாக அளித்தல் ஆகியன இருந்தன. ஆனால் இரண்டாவது பேக்கேஜ் இன்னும் விரிவானதாக இருக்க வேண்டும்.

    ஊரக வேலைவாய்ப்பு, எளிதான வங்கிக்கடன், கொள்கை சீர்திருத்தம் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக பொருளாதார பேக்கேஜ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: