Home /News /national /

#Exclusive | வரி செலுத்துவோரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க புதிய சட்டம் - நிர்மலா சீதாராமன்

#Exclusive | வரி செலுத்துவோரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க புதிய சட்டம் - நிர்மலா சீதாராமன்

  • News18
  • Last Updated :
    விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோமோ அதே போல் தவறு செய்வோர் மீது நடவடிக்கை பாய்வதையும் தடுக்க முடியாது என்று நிதியமைச்சர் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நியூஸ் 18 குழும செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "வரி செலுத்துவோரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தவிர்க்க புதிய சட்டம் கொண்டு வருகிறோம். இதை கொண்டு வரும் உலகின் 4வது நாடு இந்தியா. வரி செலுத்துவோரை நம்புகிறோம் என செயலில் காட்டவே இந்த ஏற்பாடு” என்றார்.

    ”அடிக்கடி வருமான வரி, சிபிஐ சோதனைகள் நடக்கின்றனவே.... இது வர்த்த நலன்களை பாதிக்கின்றனவே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “வரி செலுத்துவோர் துன்புறுத்தப்படமாட்டார்கள் என குறிப்பிட்ட அளவுக்காவது உறுதி அளிக்கப்படவேண்டும். அதை சட்டமாகவே கொண்டு வந்து நிரூபிக்கப் போகிறோம்.

    ஆனால், பெரும் முறைகேடு நடந்தாலோ, பணப் பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டாலோ அதிகாரிகளை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்ல முடியுமா என்ன? துன்புறுத்தல் கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோமோ அதே போல் தவறு செய்வோர் மீது நடவடிக்கை பாய்வதையும் தடுக்க முடியாது” என்றார்.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Budget 2020, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி