Home /News /national /

#Exclusive | பொருளாதார மந்தநிலை மாறிவிட்டது - நிர்மலா சீதாராமன்

#Exclusive | பொருளாதார மந்தநிலை மாறிவிட்டது - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • News18
  • Last Updated :
    தற்போது வெளியாகும் சில தரவுகள் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நியூஸ் 18 குழும செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

    ”பொருளாரத்தில் தற்போது லேசான சறுக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி 6 - 6.5% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறிர்கள்? பொருளாதாரம் எப்போது சீரடையும்? ஆண்டின் முதல் பாதியிலா அல்லது அடுத்த பாதியிலா?” என்ற கேள்விக்கு, நிர்மலா சீதாராமன், “பொருளாதார வளர்ச்சிக் குறித்து, ஜூலை மாதத்திலிருந்து வந்த தரவுகள், மற்றும் கருத்துக்கள் எதிர்மறையாக இருந்தன. நான் அவர்களை குறை சொல்லவில்லை, அந்த நேரத்தில் அந்த மாதிரியான சூழல் இருந்தது. தற்போது அது மாறிவிட்டது.

    தற்போது வெளியாகும் சில தரவுகள் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றன. எனவே, இதே வாய்ப்பை வழங்கி, நிறுவனங்கள் கூறுவதை கேட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு பதிலளித்து, நாங்கள் எடுத்த நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வந்தால், ஆக்கபூர்வமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

    ”பொருளாதாரத்தில் நீங்கள் எங்கு பிரச்னையை காண்கிறீர்கள். 6- 6.5% வளர்ச்சியை முன்னாள் நிதியமைச்சர் அரசின் பொறுப்பற்ற தகவல் என கூறுகிறாரே?” என்ற கேள்விக்கு, நிர்மலா சீதாராமன், “இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும், மிக மிக கவனத்தில் கொண்டு தயாரித்துள்ளோம் என நான் நினைக்கிறேன்.” என்றார்.

    ”இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், கிராமங்களில் நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளதா? கிராமங்களில் நுகர்வை அதிகரிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். பட்ஜெட்டில் உள்ள எந்த அம்சங்கள் அதனை நிறைவேற்றும்?” என்ற கேள்விக்கு, நிர்மலா சீதாராமன், “ஏராளமான அம்சங்களை கருத்தில் கொண்டு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஏறக்குறைய 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் கிராமங்களுக்காக நிறைய திட்டங்கள் குறித்து பேசி வருகிறார். சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலங்களில் உள்ள பின்தங்கியுள்ள 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு மருத்துவமனைகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இங்கு சுய உதவி குழுக்களை இணைத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை திரட்டுதல், கடலோர கிராமங்களில் மீன் உற்பத்தி சங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

    நபார்டு மற்றும் முத்ரா வங்கிகளை கிராமங்களுக்கு கொண்டு வந்து, அவற்றின் மூலம் கடன் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முலம் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும் இத்திட்டங்களின் மூலம் கிராமங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என நாங்கள் நினைக்கிறோம்” என்று கூறினார்.
    Published by:Sankar
    First published:

    Tags: Budget 2020, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி