புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பல்வேறு தரவரிசை பட்டியலை வழக்கமாக வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பெரும் பணக்காரர்கள், சக்தி வாய்ந்த நபர்கள் போன்ற புள்ளி விவரங்களை பலரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் நிர்மலா சீதாராமன் போர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து நான்காவது முறையாக இடம்பெற்றுள்ளார். ஐரோப்பிய கமிஷனின் தலைவரான ஊர்சுலா வாண்டர் லியன் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க துறை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அளவில் முதல் இடத்திலும் சர்வதேச அளவில் 36ஆவது இடத்திலும் நிர்மலா சீதாராமன் உள்ளார்.
இந்தாண்டு நிர்மலா சீதாராமனையும் சேர்த்து 6 இந்திய பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். நிர்மலா சீதாராமனை போலவே எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் 53 இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி 54 இடத்திலும் உள்ளனர். இவர்களைப் போலவே, இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் சோமா மொண்டல் 67 இடத்திலும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 72 இடத்திலும், Nykaa நிறுவனத்தின் தலைவர் பல்குனி சஞ்சய் நய்யார் 89ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் ரோஷிணி, கிரண் மஜும்தார், பல்குனி ஆகிய மூவரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம் பிடித்தனர். செல்வம், ஊடக பிரபலத்தன்மை, சமூகத்தில் தாக்கம், செல்வாக்கு ஆகிய நான்கையும் கணக்கில் கொண்டு இந்த பட்டியலை போர்ப்ஸ் தயாரிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Forbes, Nirmala Sitharaman