முகப்பு /செய்தி /இந்தியா / பட்ஜெட் கூட்டத்தொடர் : மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

பட்ஜெட் கூட்டத்தொடர் : மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

நிர்மலா சீத்தாராமன்

நிர்மலா சீத்தாராமன்

டெல்லியில் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக, மாநில அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து படிப்படியாக நாடு மீண்டு வரும் நிலையில், அடுத்தாண்டுக்கான பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த பட்ஜெட் பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசிக்கவுள்ளார். இன்றைய கூட்டத்தில், மாநிலங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க : விவசாயிகளே! இந்த முறை ₹2000 பெற ஆதார் எண் கட்டாயம் இணைக்கனும்...! எளிமையாக இணைக்க இதோ வழி...

top videos

    நிலுவையில் உள்ள நிதி மற்றும் ஜிஎஸ்டி நிலுவைகளை விடுவிப்பது குறித்து மாநிலங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    First published:

    Tags: Nirmala Seetharaman, Union Budget 2023