முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive : அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்

Exclusive : அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman : இந்த பட்ஜெட் சுய உதவி செய்யும் கிராமபுற பெண்களை ஒன்றினைத்து அவர்களை மேலும் மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் பதில்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் தாக்கதல் செய்த பின் நியூஸ் 18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேகமாக நேர்காணல் அளித்தார். அப்போது இந்த பட்ஜெட்டில் நீங்கள் என்ன பயனை எதிர்ப்பார்க்கிரீர்கள் என்ற கேள்விக்கு, “இந்த பட்ஜெட் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால், மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்தால், சுற்றுலாதுறையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்ப்பார்க்கிறேன்.

மற்ற நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் இந்தியாவிற்கு சுற்றுலாவிற்காக வருகை தருவார்கள். அது இந்திய பொருளாதாரத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும். பி.எம் விகாஸ் திட்டமும் உடன் செயல்படுவதால், சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் பலன் அடைவார்கள். அவர்களிடமே சிறப்பான பொருளாதாரத்திற்கான உத்வேகம் இருக்கிறது. பி.எம் விகாஸையும் இத்துடன் செயல்படுத்துவதால், ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இல்லாமல் அனைவருக்குமான பட்ஜெட்டாக இது அமையும்.

மேலும் இது ஒரு துறையை மட்டும் மையப்படுத்தி இல்லாமல், அனைவருக்குமான பட்ஜெட்டாக இது இருக்கும். இந்த பட்ஜெட் சுய உதவி செய்யும் கிராமபுற பெண்களை ஒன்றினைத்து அவர்களை மேலும் மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும். உதாரணமாக, சுயமாக அப்பளம் செய்யும் பெண்கள் கிராமங்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைத்தால், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அவர்கள் மிகப்பெறும் பங்கு வகிப்பார்கள் என தெரிவித்தார்.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, News 18, Union Budget 2023