Home /News /national /

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க புதிய தொழில் நுட்பம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க புதிய தொழில் நுட்பம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மனித கழிவு

மனித கழிவு

Union Budget 2020 |

  • News18
  • Last Updated :
    மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்க பட்டு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 - 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார். இதில் போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1.07 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, சென்னை -பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023ம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

    இதில் பெரிதும் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். தொழில் நுட்பங்கள் பல்கி பெருகினாலும் மனித கழிவுகளை அகற்றுவதில் இன்றளவும் மனிதர்கள் தான் ஈடுபடுகின்றனர். இதற்காக எத்தனை குரல் ஓங்கினாலும் முழுமையான தீர்வு இன்றளவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில் இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Budget 2020, Budget Session, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி