ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரகுராம் ராஜன், மன்மோகன் சிங் காலத்தில்தான் வங்கிகள் மோசமாக இருந்தன! நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

ரகுராம் ராஜன், மன்மோகன் சிங் காலத்தில்தான் வங்கிகள் மோசமாக இருந்தன! நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

ரகுராம் ராஜன், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் வருத்தப்படுவார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மன்மோகன் சிங் பிரதமராகவும் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் இருந்த காலக்கட்டத்தில்தான் பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருந்தன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘இந்தியப் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மிகப் பெரிய பொருளாதார அறிஞரான ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் பொறுப்பேற்றதற்கு நான் மதிப்பளிக்கிறேன்.

  ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில்தான் அரசியல்வாதிகளின் ஒரு போன் செய்து பொதுத்துறை வங்கிகளிலிருந்து லோன்கள் எளிதாகப் பெறப்பட்டது. ரகுராம் ராஜன், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் வருத்தப்படுவார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நான், அவருக்கு உரிய மரியாதை அளிக்கிறேன்.

  ஆனால், உங்கள் முன்பு உண்மையைச் சொல்கிறேன். மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோது பொதுத்துறை வங்கிகள் மோசமாக இருந்ததைவிட வேறு எப்போதும் அந்த அளவு மோசமாக இருந்தது இல்லை. அந்த நேரத்தில், இது அனைவருக்கும் தெரியும். ரகுராம் ராஜன், சரியான முறையில் விமர்சனம் செய்தால் நான் நன்றியுடன் இருப்பேன்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Minister Nirmala Seetharaman, Nirmala Sitharaman