குற்றவாளிகளுக்குத் தூக்கு எப்போது ..? நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய நிர்பயா தாயார்

குற்றவாளிகளுக்குத் தூக்கு எப்போது ..? நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறிய நிர்பயா தாயார்
  • Share this:
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக் கோரி, அவரது தாயார் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
நிர்பயா வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு எதிராக மாறி, மாறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான தேதியை அறிவிக்கக்கோரி, டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் சார்பில் முறையிடப்பட்டது.

இதுதொடர்பாக நிர்பயா தாயார் கூறிய போது, “கடந்த 7 ஆண்டுகளாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறேம். நிர்பயா குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதில் தற்போது நம்பிக்கை மற்றும் உறுதியை இழந்து நிற்கிறேன்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தண்டனையை தாமதப்படுத்தும் குற்றவாளிகளின் உத்தியை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்“ என்று கண்ணீர் மல்க கூறினார்.

 
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading