நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனு இன்று விசாரணை..!

இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனு  இன்று விசாரணை..!
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: January 28, 2020, 8:30 AM IST
  • Share this:
நிர்பயா வழக்கில் குற்றவாளியான முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17ம் தேதி நிராகரித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. முகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைமை நீதிபதியிடம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்த நிலையில், நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குற்றவாளி பவன்குமாரின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்