லண்டன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்கும் முயற்சியில் நிரவ் மோடி!

சாட்சிக்கு மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அழித்துவிடும் அபாயம் இருப்பதாக நிரவ் மோடிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: April 3, 2019, 12:30 PM IST
லண்டன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்கும் முயற்சியில் நிரவ் மோடி!
நிரவ் மோடி
Web Desk | news18
Updated: April 3, 2019, 12:30 PM IST
பண மோசடி வழக்கில் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழலில் உள்ள நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்கும் முயற்சியில் உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த பணமோசடிக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ்ச் மோடி, இந்தியாவைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். தற்போது லண்டன் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிரவ் மோடி, ஏற்கெனவே இருமுறை ஜாமின் கோரிய போதும் லண்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சாட்சிக்கு மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அழித்துவிடும் அபாயம் இருப்பதாக நிரவ் மோடிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. ஆனால், லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கேட்கும் முயற்சியில் நிரவ் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால், இதுவரை மேல்முறையீட்டு மனுவை நிரவ் மோடி சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

நிரவ் மோடி வழக்கின் மீதான விசாரணை வாய்தா வருகிற ஏப்ரல் 26-ம் தேதி வர உள்ள நிலையில் ஜாமின் மனு மீதான விசாரணையை அடுத்த 48 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிரவ் மோடி தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.









மேலும் பார்க்க: தேர்தல் அறிக்கை மூலமாக தேசத்தை பிரிக்கிறாரா ராகுல் காந்தி?
First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்