நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள முதல்வர் இன்று ஆலோசனை

2018-ல் நிபா வைரஸ் தாக்குதலால் கேரள மாநிலத்தில் 17 பேர் உயிரிழநதனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள முதல்வர் இன்று ஆலோசனை
பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: June 6, 2019, 9:16 AM IST
  • Share this:
கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவரோடு தொடர்புடைய 311 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று கொச்சியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரோடு தொடர்புடைய நண்பர்கள், உறவினர்கள் என 311 பேரை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், மாணவருக்கு முதலில் சிகிச்சை அளித்த 3 செவிலியர்கள், மாணவரின் நண்பர் மற்றும் சாலக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு நிபா தொற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவர்கள் லமச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேரின் ரத்த மாதிரிகளும் புனே மற்றும் ஆலப்புலாவில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


நிபா வைரஸ் பாதிப்பு


மக்களை நிபா அச்சம் தொற்றியுள்ள சூழலில் மாவட்டந்தோறும் தனிப்பிரிவுகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 6 பேர் கொண்ட மத்திய குழுவும் கொச்சின் வந்துள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பு குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து வந்து கேரளாவில் பணியாற்றும் தொழிலாளர்கள், கூட்டமாக ஒரே இடத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் சுகாதாரமாக இருக்கவும், காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் தாங்களே சிகிச்சை செய்து கொள்ளாமல் மருத்துவமனைக்கு வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .

நிபா வைரஸ் - கோப்புப் படம்


இதனிடையே ஆஸ்திரேலியாவில் இருந்து Human monoclonel antibody நோய்த்தடுப்பு மருந்து கொச்சின் கொண்டு வரப்படுகிறது. இந்த மருந்து பாதிக்கப்பட்ட மாணவருக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் நிபா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் அச்சம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியுள்ளன.

நிபா வைரஸ்


நெல்லை, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில், எல்லையோரம் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது. 2018-ல் நிபா வைரஸ் தாக்குதலால் கேரள மாநிலத்தில் 17 பேர் உயிரிழநதனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... உணர்வுகளுக்கு ஒலி வடிவம் கொடுத்த கலைஞன்...! இசை நாயகன் இளையராஜா

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்