Home /News /national /

திருப்பதி அருகே ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து

திருப்பதி அருகே ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து

தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது

தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது

திருப்பதி அருகே ஸ்ரீசைலத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

  • News18
  • Last Updated :
    ஸ்ரீசைலைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் 4-வது யூனிட்டில் அதிகாலையில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. அருகில் இருந்த யூனிட்டுகளில் பணியாற்றியவர்கள் வந்து பார்த்த போது அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    தீ விபத்து ஏற்பட்ட போது 4-வது யூனிட்டில் 19 பேர் பணியில் இருந்துள்ளனர். இவர்களில் 10 பேர் சுரங்கப்பாதை வழியாக தப்பி வெளியேறிவிட்டனர்.

    Also read... அமெரிக்காவை அதிர வைக்கும் காட்டுத்தீ.. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு உத்தரவு...

    மீதமுள்ள 9 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தீ கொழுந்துவிட்டு எரிவதால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.



    இதனால் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து பாதுகாப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்து காரணமாக ஸ்ரீசைலத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tirupathi

    அடுத்த செய்தி