உ.பி.யில் பயங்கரம் - நிலத்தகராறில் 3 பெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொலை

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஊர்த்தலைவர்களாக இருந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

news18
Updated: July 18, 2019, 9:45 AM IST
உ.பி.யில் பயங்கரம் - நிலத்தகராறில் 3 பெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொலை
சம்பவ இடம்
news18
Updated: July 18, 2019, 9:45 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக 3 பெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் இருதரப்பினர் இடையே நிலத்தகராறு காரணமாக நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் மாறி மாறி சுடத் தொடங்கினர்.


இந்த மோதலில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஊர்த்தலைவர்களாக இருந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...