உத்தரப் பிரதேச மாநிலத்தில் மழை காரணமாக சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று சிறார்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் லக்னோவில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் நீர் தேங்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், தலைநகரை ஒட்டியுள்ள தில்குஷா என்ற பகுதியில் ராணுவ இடம் ஒன்றின் சுற்றுச்சுவர் கனமழை வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சுற்றுச்சுவரின் அருகே பல தொழிலாளர்கள் குடிசை போட்டு வாழ்ந்து வந்த நிலையில், சுவர் விபத்தில் அந்த குடிசைகள் சேதமடைந்துள்ளது. இந்த கோர விபத்தில் சிறார்கள் 3 பேர் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை வேலையை நிகழ்ந்துள்ளது. விபத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றம்..!
மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி விரைவில் குணமடையவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விபத்திற்கு மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதேபோல் உன்னாவ் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் இரு சிறார்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கனமழை தொடர்ந்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Building collapse, Uttar pradesh