டெல்லியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து! 9 பேர் உயிரிழப்பு

25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

news18
Updated: February 12, 2019, 8:17 AM IST
டெல்லியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து! 9 பேர் உயிரிழப்பு
தீவிபத்து
news18
Updated: February 12, 2019, 8:17 AM IST
டெல்லியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர்.

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டுவருகிறது. அந்த ஹோட்டலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.

ஹோட்டலின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த தீவிபத்துக்கு 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 7 ஆண்களும், 1 பெண்ணும், ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 4-வது மாடியிலிருந்து அதிகளவில் புகை வெளிவருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see:

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...